Tuesday, September 27, 2011

மகாகவி பாரதியின் இஸ்லாத்தின் மஹிமை.

நூல்: மகாகவி பாரதியின் இஸ்லாத்தின் மஹிமை.
தொகுப்பாசிரியர்: செ. திவான், 
விலை: ரூபாய் 100/-
வெளியீடு: சுஹைனா பதிப்பகம்,

ஹிந்து சமயத்தில் ஆழ்ந்த பற்று கொண்ட மகாகவி பாரிதாயர், இஸ்லாம் மார்க்கம் குறித்தும் கதை, கட்டுரை, கவிதைகளை எழுதியுள்ளார். அவற்றை பாரதியின் பல்வேறு படைப்புகளில் இருந்து தேடி எடுத்து, இந்நூலை தொகுத்துள்ளார் ஆசிரியர். தேசப் பற்றையே தன் உயிர் மூச்சாக்க் கொண்டிருந்த பாரதி, இத்தேசம் நிலைகுலையாமல் இருக்க வேண்டுமானால், ஹிந்து -முஸ்லிம் ஒற்றுமைதான் மிக முக்கியமான தேவை – என்று வலியுறுத்திய கட்டுரைகள் ஏராளம்.

Labels:

பள்ளிகளில் கிரேடு முறை அறிமுகம்

சென்னை : தமிழக பள்ளி தேர்வு முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

சி.பி.எஸ்.இ., தேர்வு முறை போன்று, மாநில பாடத்திட்டத்தில் மதிப்பெண்களுக்கு பதிலாக கிரேடு முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. மனப்பாட முறை தேர்வுக்கு பதிலாக சிந்தித்து, கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் புதிய தேர்வு முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இப்புதிய தேர்வு மற்றும் மதிப்பீடு முறை (முழுமையான தொடர் மதிப்பீடு முறை) 1 முதல் 8ம் வகுப்பு வரை, அடுத்த கல்வியாண்டில் (2012-13) அமல்படுத்தப்படும். 9, 10ம் வகுப்புகளுக்கு, 2013-14 கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்படும்.

Labels:

Friday, September 23, 2011

புதுக்கோட்டையில் பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் நூல்கள் வெளியீட்டு விழா

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவை சார்பில் நூல்கள் வெளியீட்டு விழா வரும் 25ம் தேதி நகர்மன்ற வளாகத்தில் நடைபெறுகிறது.


இந்த விழாவுக்கு தஞ்சை தமிழ் பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுந்தரமூர்த்தி தலைமை வகிக்கிறார். பேரவைத் தலைவர் சுப்பையா வரவேற்கிறார். இந்த விழாவில் பேராசிரியர் மோகன் எழுதிய விருந்தும் மருந்தும் செவ்வியல் இலக்கியச் செழுமை, கவிஞர் தங்கம் மூர்த்தி எழுதிய கவிதை வெளியினிலே…,

Labels:

Monday, September 19, 2011

துபாயில் பெண்களுக்கான மார்க்கக் கல்வி பயிற்சி வகுப்புகள்


துபாயில் வாழும் பெண்கள் மார்க்கக் கல்வி பயில விரும்பினால் அஸ்கான் டி பிளாக்கில் செயல்படும் நூரியா அரபிக் கல்லூரியில் சேருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
Read more »

Labels:

வேலூர் சிறையில் பேரறிவாளன், சாந்தன், முருகனை சந்தித்தார் வைகோ


வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்துப் பேசினார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களின் கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டதால் அவர்களுக்கு தூக்கு உறுதியானது. ஆனால் அவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. 
Read more »

Labels:

Tuesday, September 13, 2011

சோழிகள் – குறுநாவல் விமர்சனம்!

“சிரித்தபடி சிதறின சோழிகள்” இவ்வளவு எளிமையான ஒரு அறிமுகத்தோடு கூடிய ஒரு கதையை வாசித்ததாக நினைவேயில்லை.

ரேகை ஜோசியம் பார்த்திருக்கிறேன். கிளி ஜோசியம் பார்த்திருக்கிறேன். எலி ஜோசியம் பார்த்திருக்கிறேன். ஏன் கொஞ்சநாட்களுக்கு முன்பாக ஆக்டோபஸ் ஜோசியம் கூட பார்த்திருக்கிறேன். சோழிகளை உருட்டி ஆரூடம் சொல்லுவது எனக்கு புதிது. நாவலுக்கான காலம் ஐம்பதுகள் என்பதால், அப்போது ஒருவேளை இம்முறை பரவலாக இருந்திருக்கலாம்.

கிட்டத்தட்ட ஐயாயிரம் வார்த்தைகளை கொண்ட இந்த நெடுங்கதையில் மொத்தமே ஐந்தே ஐந்து பாத்திரங்கள். இவர்கள் பேசிக்கொள்ளும் இடங்களும் ரொம்ப குறைவு என்பதால், மீதி இடங்களை எழுத்தாளரே எடுத்துக்கொண்டு பேசித்தீர்க்க வேண்டிய கட்டாயம். சலசலவென்று ஓயாமல் ஓடைபோல பேசிக்கொண்டே இருக்கிறார். மனித வாழ்வு தொடர்பான எதிர்மறை நியதிகளை விசாரிக்கும் நேர்மறை சிந்தனைகள். கொஞ்சம் நவீனமாகச் சொல்லவேண்டுமானால், ‘பார்ப்பனத் தமிழில் புரட்சிவாதம்’ என்றுகூட சோழிகளை சொல்லலாம்.

Labels:

ஆம்; நம்மால் முடியும் – புத்தக விமர்சனம்


ஆசிரியர்: வைகோ
வெளியீடு: விகடன் பிரசுரம்
விலை:  ரூ. 150
கிடைக்குமிடம்: நூல் உலகம்

உலகில் வாழும் அனைத்து மனித இனங்களும் சம உரிமை பெற்று வாழும் சுதந்திர உணர்வு படைத்தவை. ஆண்டான் _ அடிமை என்று பாகுபாடு இல்லாத உலகத்தைத்தான் அனைத்து இன மக்களும் விரும்புகின்றனர்.

உலகில் தோன்றிய மனித இனங்கள் ஒன்றுக்கொன்று சமம் அற்றவை என்ற சித்தாந்தம் ஆதிக்க இன மக்களிடம் வளர்ந்து, அந்த மனப்பான்மையே நிறவெறியாகவும் வளர்ந்தது. ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும் கறுப்பு இன மக்கள் அனுபவித்த கொடிய துயரங்கள் சொல்லி மாளாது.

Labels:

Sunday, September 11, 2011

டாக்டர் பிரகாஷின் புத்தக வடிவம் பெறும் எழுத்துக்கள்..!

டாக்டர் பிரகாஷை தெரியாதவர்கள் யாரும் தமிழ்நாட்டில் இருக்க முடியாது. உலகளவில் புகழ்பெற்ற முடநீக்கியல் (ஆர்த்தோபீடிக்) நிபுணர். தமிழ் பத்திரிகைகளுக்கோ செக்ஸ் டாக்டர். 2001 டிசம்பரில் இவர் தான் டாக் ஆஃப் தமிழ்நாடு. சென்னை அண்ணாநகரில் மருத்துவமனை வைத்திருந்த டாக்டர் பிரகாஷ் தன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த பெண்களை மயக்கி ஆபாச படம் எடுத்து இணையத்தளங்களுக்கு விற்றார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. அப்போது கூகிளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக டாக்டர் பிரகாஷ் என்பது இருந்திருக்கும். இப்போதும் Dr. Prakash என்று டைப் செய்து தேடிப்பாருங்கள், அஜால் குஜால் படங்களாக வருகிறது. அவரது காலாஞ்சிக்குப்பம் கடற்கரை உல்லாச மாளிகை பற்றியெல்லாம் இஷ்டத்துக்கும் கட்டுக்கதைகள் அவிழ்த்துவிடப்பட்டன.

Labels:

Saturday, September 10, 2011

சீனா – விலகும் திரை புத்தக விமர்சனம்

சீனா – விலகும் திரை
பல்லவி அய்யர் (தமிழில்: ராமன் ராஜா)
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள்: 360, விலை: ரூ 200.
கிடைக்குமிடம்:நூல் உலகம்

சீனாவைப் பற்றி ஒரு பார்வையாளனின் எண்ணங்களின் தொகுப்புதான் இந்தப் புத்தகம். சீனாவை ஒரு சட்டகத்திற்குள் அடைக்கும் முயற்சியோ, அல்லது சீனாதான் டாப்பு அல்லது வேஸ்ட்டு என்றோ குறிப்பிடாமல் ஒரு இந்தியன் சீனாவில் வாழ்ந்த காலங்களில் தான் கண்டு, கேட்டதை தனது இந்தியக் கண்ணாடி கொண்டு பார்த்திருக்கிறார். அங்கிருக்கும் நல்லது கெட்டதுகளையும், அது இந்தியாவில் இருந்தால் எப்படி நமக்கு நன்மை பயக்கிறது என்பதையோ, அல்லது அது நமக்கு எப்படி பாதகமாக இருக்கிறது என்பதையோ தனது கருத்தாக பதிவு செய்திருக்கிறார் பல்லவி அய்யர்.

Labels:

ஒற்றன் - புத்தக விமர்சனம்

நூல்: ஒற்றன்
ஆசிரியர்: அசோகமித்திரன்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
விலை: 100 ரூபாய்
கிடைக்குமிடம்: நூல் உலகம்

1973 – ஆம் ஆண்டு அமெரிக்காவின் அயோவா சிடியிலுள்ள பல்கலைக் கழகம் உலகிலுள்ள சில மிக்கியமான எழுத்தாளர்களை அழைத்து ஒரு ஏழு மாத கால சந்திப்புடன் கூடிய மாநாடு நடத்தினார்கள். அதற்கு ஜப்பான், ஐரோப்பா, அமேரிக்கா, தென் கொரியா, வாட கொரியா, தைவான், இந்தியா, சிலி, பெரு, ஆப்பிரிக்கா போன்ற பல கண்டம் மற்றும் தேசங்களில் இருந்து எழுத்தாளர்கள் கலந்து கொண்டார்கள். இந்தியாவிலிருந்து அந்த மாநாட்டிற்கு எழுத்தாளர் அசோகமித்திரன் கலந்து கொண்டார்.

Labels:

விடுதலைப் புலிகளுக்கு அப்பால் ராஜீவ் கொலைப் பின்னணி – காலடிச் சுவடுகள் – புத்தக வெளியீடு (Book Release)


ராஜீவ் காந்தி. இவரது மரணத்திற்காக 21 ஆண்டுகளாக 7 பேரை தூக்குக் கொட்டடியிலும், சிறைக் கொட்டடியிலும் வைத்திருந்தாலும், இந்த வழக்கு மத்திய புலனாய்வுத் துறையால், இன்றும் விசாரிக்கப் பட்டு வருகிறது. இன்றும் விசாரணையில் இருக்கும் ஒரு வழக்கில் 21 ஆண்டுகளாக 7 பேரை சிறையில் அடைத்து வைத்திருப்பது எந்த வகையில் நியாயம் ?

Labels:

Friday, September 9, 2011

நீதி கோரும் பேரறிவாளன் கடிதங்கள், விளக்கங்கள்- இந்தியில் புத்தகமாக வெளியீடு

தனது தரப்பு வாதங்கள், நியாயங்களை விளக்கியும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மறைக்கப்பட்ட உண்மைகளையும் விளக்கி பேரறிவாளன் எழுதிய கடிதங்கள் உள்ளிட்டவற்றின் தொகுப்பு அடங்கிய நூலின் இந்தி மொழியாக்கம் சென்னையில் வெளியிடப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் நூலை வெளியிட்டார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சிபிஐ தேசியச் செயலாளர் டி.ராஜா, பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Labels:

செங்கொடியின் பாதையில் நீண்ட பயணம்

நூல்: செங்கொடியின் பாதையில் நீண்ட பயணம்
ஆசிரியர்: கோ.வீரய்யன்,
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு மாநிலக் குழு சென்னை-45. பக்.256, ரூ.125.

வரலாறு என்பதே முன்னேற்றத்திற்கான போராட்டம்தான் என்று சொல்வார்கள். இதை வெளிப்படுத்தும் விதமாக வந்துள்ள நூல்தான், “செங்கொடியின் பாதையில் நீண்ட பயணம் என்ற தோழர் கோ.வீரய்யன் அவர்களின் சுயசரிதை. சித்தாடி எனும் சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்து குடும்பத்தின் வறுமையும், கிராமத்தின் சூழலும் சேர்ந்து பள்ளி சென்று படிப்பதற்கான வாய்ப்பு வீரய்யனுக்கு கிடைக்கவில்லை, மாடுமேய்க்கும் வேலைக்கு இடையூறில்லாமல் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் இரவு நேரத்தில் சில மாதங்கள் படித்ததுதான் எழுத்தையும் – எண் கணிதத்தையும் அறிய கிடைத்த அரிய வாய்ப்பு.

Labels:

Wednesday, September 7, 2011

மீண்டும் ஒரு காதல் கதை


புத்தகத்தின் பெயர்:- மீண்டும் ஒரு காதல் கதை

ஆசிரியர் அன்புள்ள நண்பர் சங்கருக்கு..

உங்களின் கதைகளைப் படித்தேன். “மீண்டும் ஒரு காதல் கதை”யைப் படித்து முடித்தவுடன், மீண்டும் ஒரு முறை படிக்க தூண்டியது. மறுபடியும் படித்தேன். ‘ஷ்ரத்தா” கேரக்டர் அப்படியே என் மனதில் பதிந்துவிட்டது. சுஜாதாவின்”பிரிவோம்..சந்திப்போம்’ நாயகி மதுமிதா எவ்வளவு தூரம் மனதை பாதித்தாளோ.. அதே அளவு ஷ்ரத்தாவும் என் மனதை பாதித்துவிட்டாள். இப்படிஒருத்தியை வாழ்வில் சந்திக்க மாட்டோமா? என்ற ஏக்கம் வயதையும் மறந்து வருகிறது. (அப்படியொன்றும் வயதாகிவிடவில்லையே.. “நாமெல்லாம் இளைஞர்கள் தானே..”).

Labels:

Sunday, September 4, 2011

கொளத்தூர் மணி தலைமையில் சென்னையில் வெளியிடப்பட்ட முள்ளிவாய்க்கால் சாட்சி புத்தகம்


சென்னையில் கடந்த 04.09.11 அன்று ‘முள்ளிவாய்க்கால் சாட்சி’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. புத்தக வெளியிட்டு விழா திரு அன்பரசன் தீனதயாளன் மற்றும் எழில் சுரேசு அவர்களின் திருமண நிகழ்வோடு சேர்ந்து நடைபெற்றது. நோர்வேயிலும் லண்டனிலும் ஏற்கனவே வெளியிடப்பட்ட இப்புத்தகத்தை தமிழகத்தில் மருத்துவர் எழிலன் தலைமையில் இயங்கும் இளைஞர் இயக்கம் வெளியிட்டத்து. திருமண விழாவிற்கும் இப்புத்தக வெளியீட்டு விழாவிற்கும் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமை தாங்கினார்.

Labels: