Monday, September 19, 2011

வேலூர் சிறையில் பேரறிவாளன், சாந்தன், முருகனை சந்தித்தார் வைகோ


வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்துப் பேசினார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களின் கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டதால் அவர்களுக்கு தூக்கு உறுதியானது. ஆனால் அவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. 

கடந்த 9-ம் தேதி அவர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதாக இருந்தது. ஆனால் அவர்களின் தூக்கு தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவர்களின் கருணை மனுக்கள் பல ஆண்டுகள் கழித்து நிராகரிக்கப்பட்டதை முன்வைத்து வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி வாதாடினார். இறுதியில் அவர்களின் தூக்கு தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த 3 பேருக்காக வாதாட ராம்ஜெத்மலானியை அழைத்து வந்த மதிமுக செயலாளர் வைகோ இன்று வேலூர் சிறைக்கு சென்றார். அங்கு பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home