Saturday, October 1, 2011

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி தமது 79 ஆவது வயதில் மறைவு!!

கடந்த புதன் கிழமை (06-07-2011) அன்று பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி(1932-2011) தமது 79 ஆவது வயதில் நம்மை விட்டு நிரந்தரமாக பிரிந்தார். அவர் நம் அனைவரினதும் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழ் அறிஞர் ஆவார். அவரது இறப்பு நிகழ்ந்த அன்றைய தினம் சுமார் இரவு 8.30 மணியளவில் சக்தி எப்.எம். செய்தி ஆசிரியர் திரு.கே.எம். ரசூல் “பேராசிரியர் சிவத்தம்பி இறந்துவிட்டார். அவர் பற்றிய சில தகவல்களை பெறமுடியுமா'' எனக் கேட்டார். “ஐயோ'' என அலறியதாக ஞாபகம். அதிர்ச்சியில் எதையுமே பேச முடியாத நிலை. தொண்டை அடைத்துப் போயி கண்கள் குலமாகிக் கொண்டிருந்தன. நண்பர் என்னை புரிந்துக் கொண்டவராக “உங்கள் நிலை எனக்கு புரிகின்றது. உங்களுடன் பின் தொடர்புக் கொள்கின்றேன்'' என தொலைபேசியை வைத்துவிட்டார். பின் பேராசிரியரின் குடும்ப நண்பரான றமணனுடன் தொடர்புக் கொண்டு செய்தியை உறுதப்படுத்திக் கொண்டேன்.
Read more »

Labels:

Tuesday, September 27, 2011

மகாகவி பாரதியின் இஸ்லாத்தின் மஹிமை.

நூல்: மகாகவி பாரதியின் இஸ்லாத்தின் மஹிமை.
தொகுப்பாசிரியர்: செ. திவான், 
விலை: ரூபாய் 100/-
வெளியீடு: சுஹைனா பதிப்பகம்,

ஹிந்து சமயத்தில் ஆழ்ந்த பற்று கொண்ட மகாகவி பாரிதாயர், இஸ்லாம் மார்க்கம் குறித்தும் கதை, கட்டுரை, கவிதைகளை எழுதியுள்ளார். அவற்றை பாரதியின் பல்வேறு படைப்புகளில் இருந்து தேடி எடுத்து, இந்நூலை தொகுத்துள்ளார் ஆசிரியர். தேசப் பற்றையே தன் உயிர் மூச்சாக்க் கொண்டிருந்த பாரதி, இத்தேசம் நிலைகுலையாமல் இருக்க வேண்டுமானால், ஹிந்து -முஸ்லிம் ஒற்றுமைதான் மிக முக்கியமான தேவை – என்று வலியுறுத்திய கட்டுரைகள் ஏராளம்.

Labels:

பள்ளிகளில் கிரேடு முறை அறிமுகம்

சென்னை : தமிழக பள்ளி தேர்வு முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

சி.பி.எஸ்.இ., தேர்வு முறை போன்று, மாநில பாடத்திட்டத்தில் மதிப்பெண்களுக்கு பதிலாக கிரேடு முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. மனப்பாட முறை தேர்வுக்கு பதிலாக சிந்தித்து, கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் புதிய தேர்வு முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இப்புதிய தேர்வு மற்றும் மதிப்பீடு முறை (முழுமையான தொடர் மதிப்பீடு முறை) 1 முதல் 8ம் வகுப்பு வரை, அடுத்த கல்வியாண்டில் (2012-13) அமல்படுத்தப்படும். 9, 10ம் வகுப்புகளுக்கு, 2013-14 கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்படும்.

Labels:

Friday, September 23, 2011

புதுக்கோட்டையில் பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் நூல்கள் வெளியீட்டு விழா

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவை சார்பில் நூல்கள் வெளியீட்டு விழா வரும் 25ம் தேதி நகர்மன்ற வளாகத்தில் நடைபெறுகிறது.


இந்த விழாவுக்கு தஞ்சை தமிழ் பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுந்தரமூர்த்தி தலைமை வகிக்கிறார். பேரவைத் தலைவர் சுப்பையா வரவேற்கிறார். இந்த விழாவில் பேராசிரியர் மோகன் எழுதிய விருந்தும் மருந்தும் செவ்வியல் இலக்கியச் செழுமை, கவிஞர் தங்கம் மூர்த்தி எழுதிய கவிதை வெளியினிலே…,

Labels:

Monday, September 19, 2011

துபாயில் பெண்களுக்கான மார்க்கக் கல்வி பயிற்சி வகுப்புகள்


துபாயில் வாழும் பெண்கள் மார்க்கக் கல்வி பயில விரும்பினால் அஸ்கான் டி பிளாக்கில் செயல்படும் நூரியா அரபிக் கல்லூரியில் சேருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
Read more »

Labels:

வேலூர் சிறையில் பேரறிவாளன், சாந்தன், முருகனை சந்தித்தார் வைகோ


வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்துப் பேசினார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களின் கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டதால் அவர்களுக்கு தூக்கு உறுதியானது. ஆனால் அவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. 
Read more »

Labels: